sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ரூ.33 லட்சம் கொள்ளை வழக்கு மதுரை, சாயல்குடியில் விசாரணை

/

ரூ.33 லட்சம் கொள்ளை வழக்கு மதுரை, சாயல்குடியில் விசாரணை

ரூ.33 லட்சம் கொள்ளை வழக்கு மதுரை, சாயல்குடியில் விசாரணை

ரூ.33 லட்சம் கொள்ளை வழக்கு மதுரை, சாயல்குடியில் விசாரணை


ADDED : மே 08, 2025 02:26 AM

Google News

ADDED : மே 08, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:பணகுடி அருகே பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ. 33 லட்சம் கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து மதுரை மற்றும் சாயல்குடியில் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, இஸ்ரோ விண்வெளி மையம் அருகே மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் கிரஹாம்பெல் குடும்பத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த 5ம் தேதி பங்க் மேலாளர் ரூ. 36 லட்சத்து 6 ஆயிரத்தை அங்குள்ள ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்துவதற்காக டூவீலரில் கொண்டு சென்றார். அதை ஏற்கனவே அறிந்த டூவீலரில் வந்த மூன்று வாலிபர்கள் அவர் மீது மோதுவது போல் நின்று அவரது பணப் பையை பறித்து சென்றனர்.

இதில் ரூ. 3 லட்சம் மற்றும் கொள்ளையர்களில் ஒருவரது அலைபேசி அங்கு விழுந்துவிட்டது.

இந்நிலையில் அலைபேசியை தவறவிட்ட வாலிபர் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர், மேலும் இருவரில் ஒருவர் மதுரை, மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் என்பது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்ய அப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us