ADDED : ஏப் 20, 2026 01:57 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4.05 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி--சிவந்திபட்டி சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேசவராஜ் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4.05 லட்சம் ரொக்கம் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டது தெரிந்தது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
