ADDED : ஏப் 22, 2026 01:31 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: தென்காசி, கடையநல்லுார் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.54.37 லட்சம் சிக்கியது.
கடையநல்லுாரில் உள்ள முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்லத்துரை அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் சோதனை நடத்தி ரூ.44.37 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் கடையநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க., நகர செயலாளர் சாதிர் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.அவரது வாகன ஓட்டுநர் இசக்கிமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
