ADDED : ஜன 18, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது இரு அணு உலைகளில் மின் உற்பத்தி நடக்கிறது. 3, 4வது அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்திக்கு தயாராக உள்ளன.
இந்த வளாகத்தில் ஆறு அணு உலைகள் அமைகின்றன.
ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான பணி நடந்து வருகிறது. இதில், 6வது அணு உலை ரஷ்யாவில் இருந்து கப்பலில் ஜன., 15ல் அனுப்பப்பட்டுள்ளது.
மொத்தம், 320 டன் எடையுள்ள அணு உலை கூடங்குளத்திற்கு விரைவில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.