ADDED : ஏப் 24, 2025 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மாடி வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இம்மாநகராட்சி பாளை. மார்க்கெட் அருகே முனையாடுவார் நாயனார் தெருவில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது ஹலிமா என்பவர் 1950 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்றிருந்தார். ஆனால் அனுமதி இன்றி 4 ஆயிரம் சதுர அடியில் அதனை கட்டியுள்ளார். இது குறித்து புகாரில் மாநகராட்சி சிட்டி பிளானர் தமிழ்ச்செல்வன், உதவி சிட்டி பிளானர் ஹெபின்ஜாய் மற்றும் அதிகாரிகள் அனுமதியற்ற வணிக வளாகத்திற்கு நேற்று சீல் வைத்தனர்.