ADDED : ஏப் 11, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி சீவலப்பேரி காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்தது.
அங்கிருந்த பழைய தேர் சிதிலமடைந்திருந்தது. அதனால் ரூ.55 லட்சத்தில் புதிய தேர் அமைக்கப்பட்டு கடந்த 2ம் தேதி வெள்ளோட்டம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, சீவலப்பேரி சந்தைபேட்டை முஸ்லிம்கள் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

