ADDED : அக் 06, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம்:திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர் 52. இவர் 1997ல் போலீஸ் பணியில் சேர்ந்தார்.
பழநி புதுநகர் பகுதியில் வசித்த இவர் சாமிநாதபுரம் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணி செய்தார். நேற்று மாலை ஸ்டேஷனுக்கு 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்றபோது, தாழையூத்து அருகே பழநியில் இருந்து வந்த கார் பின்புறமாக மோதியது.
இதில் அப்துல் கபூர் சம்பவ இடத்திலே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.