sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பெண் போலீஸ் மீது தாக்குதல் எஸ்.எஸ்.ஐ., மனைவி கைது

/

 பெண் போலீஸ் மீது தாக்குதல் எஸ்.எஸ்.ஐ., மனைவி கைது

 பெண் போலீஸ் மீது தாக்குதல் எஸ்.எஸ்.ஐ., மனைவி கைது

 பெண் போலீஸ் மீது தாக்குதல் எஸ்.எஸ்.ஐ., மனைவி கைது

1


ADDED : டிச 19, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 19, 2025 04:58 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே குடும்பத்தகராறில் பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்தில் தச்சநல்லுார் சிறப்பு எஸ்.ஐ., -யின் மனைவி கைது செய்யப்பட்டார். பெண் போலீசின் கணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த முருகானந்தம், தச்சநல்லுார் போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,ஆக உள்ளார். இவரது மனைவி சாந்தா 53. இவர்களது மகன் ஹபீஸ் 28, கூடங்குளம் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக உள்ளார். ஹபீஸுக்கும், சீவலப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஒரு பெண் போலீசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஹபீஸுக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் போலீஸ் கணவரைப் பிரிந்து திருச்சியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்றுகணவர் வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்துச் செல்ல பாளையஞ்செட்டிகுளத்திற்குச் சென்ற போது, அங்கிருந்த மாமனார் மற்றும் மாமியார் சேர்ந்து அந்த பெண் போலீசை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீசில் புகார் அளித்தார். கணவர், மாமனார், மாமியார் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., முருகானந்தத்தின் மனைவி சாந்தாவை போலீசார் கைது செய்தனர். மேலும், குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாகவும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவும் போலீஸ்காரர் ஹபீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us