/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கல்குவாரியில் மூழ்கி மாணவர் பலி
/
கல்குவாரியில் மூழ்கி மாணவர் பலி
ADDED : ஜூலை 07, 2025 03:34 AM
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே பாலிடெக்னிக் மாணவர் கல்குவாரி நீரில் மூழ்கி பலியானார்.
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே வாகைகுளம், இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு மனைவி, மகேஷ்வரன் 17, முகேஷ் 15,சஞ்சய் 13, ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் மகேஷ்வரன் சங்கரன்கோவில் அருகே பருவக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். ஊருக்கு அருகே உள்ள கல்குவாரி கல்வெட்டான் குழி பகுதியில் மகேஷ்வரன் விளையாட சென்றார். அப்போது கை, கால் சுத்தம் செய்வதற்காக கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கினார். அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே, நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் மகேஷ்வரனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குருவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.