/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவர் வெட்டிக்கொலை; எதிர்வீட்டு வாலிபர் கைது
/
மாணவர் வெட்டிக்கொலை; எதிர்வீட்டு வாலிபர் கைது
ADDED : ஜன 09, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர் லட்சுமணன் 15.
இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சபரி ராஜன் 23. சில நாட்களுக்கு முன் சபரி ராஜன், லட்சுமணனை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. சபரிராஜன் அரிவாளால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமுற்ற லட்சுமணன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை அவர் இறந்தார். சம்பவத்தன்றே சபரி ராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

