தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாணவி ஆணவக்கொலை: காதலர் புகார்

 மாணவி ஆணவக்கொலை: காதலர் புகார்

 மாணவி ஆணவக்கொலை: காதலர் புகார்


ADDED : பிப் 03, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக காதலர் போலீசில் புகாரளித்தார்.

பேட்டை அன்னதான விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பட்சிராஜன் மகள் சிவமதி 18. கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், கழுத்தில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். மாணவி மாற்று சமூக வாலிபரை காதலித்ததற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் காதலர் ஆனந்த கிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், நாங்கள் இரண்டு ஆண்டுகளாக காதலித்தோம். எனது ஜாதியை காரணம் காட்டி சிவமதி குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது.

இது ஆணவக் கொலை என புகார் அளித்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி தூக்கிட்டு இறந்தது தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us