/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
விளம்பர பைகளுக்கு கட்டணம் இனிப்பகத்திற்கு 'தண்டனை'
/
விளம்பர பைகளுக்கு கட்டணம் இனிப்பகத்திற்கு 'தண்டனை'
விளம்பர பைகளுக்கு கட்டணம் இனிப்பகத்திற்கு 'தண்டனை'
விளம்பர பைகளுக்கு கட்டணம் இனிப்பகத்திற்கு 'தண்டனை'
ADDED : ஜூன் 28, 2025 06:44 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பரமசிவம். பாளையில் உள்ள ராம் லாலா ஸ்வீட் நிறுவனத்தில், 420 ரூபாய்க்கு ஸ்வீட்ஸ் வாங்கினார். இனிப்பை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்த பையில் வைத்து, அந்த பைக்கு 20 ரூபாய் வசூல் செய்தனர். இதை கண்டித்து, 2019ல், பரமசிவம் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பரமசிவத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க 2023 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, ஸ்வீட் ஸ்டால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பரமசிவத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 ஆயிரம், வழக்குச் செலவு 5,000, விளம்பரப்படுத்தப்பட்ட பைக்கான தொகை 20 சேர்த்து, 15,020 திரும்ப கொடுக்க உத்தரவிட்டனர்.