/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்
/
டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்
டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்
டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்
UPDATED : மே 22, 2024 01:50 PM
ADDED : மே 22, 2024 10:57 AM

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் பஸ்ஸில் ஏறி உள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது, ''அந்த காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது,'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நடத்துனர், ''அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும்,'' எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து காவலர், ''எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம்; நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும்'' என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது தூரத்தில் காவலரை நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

