/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பட்டியலின மாணவரை தாக்கியவர் கைது
/
பட்டியலின மாணவரை தாக்கியவர் கைது
ADDED : ஜன 09, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி, : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பட்டியலின மாணவர்கள் இருவரை அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூக வாலிபர்கள், பள்ளியில் இருந்து வெளியே வரும் போது தாக்கினர்.
அதே பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் இருவரும் இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். முக்கூடல் போலீசார் இதில் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். 2 மாணவர்கள் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

