/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீஸ்காரர் வீடு புகுந்து தாக்கியவர்களுக்கு மாவுக்கட்டு
/
போலீஸ்காரர் வீடு புகுந்து தாக்கியவர்களுக்கு மாவுக்கட்டு
போலீஸ்காரர் வீடு புகுந்து தாக்கியவர்களுக்கு மாவுக்கட்டு
போலீஸ்காரர் வீடு புகுந்து தாக்கியவர்களுக்கு மாவுக்கட்டு
ADDED : பிப் 16, 2025 02:21 AM
திருநெல்வேலி: போலீஸ்காரரின் வீட்டில் புகுந்து காரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கட்டடத்தில்இருந்து குதித்ததால் மூவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டுஉள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்வ குமரேசன் 38. நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவில் பணியாற்றுகிறார்.பிப்.,9 இரவு இவர் அலுவலக பணியாக மதுரை சென்றிருந்தார்.
இரவில் இவரது வீட்டிற்கு டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும்குழந்தைகள் பதட்டமடைந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டு சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில் அந்த மூன்று பேரும் சுத்தமல்லி அருகே சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி 28, முத்துக்குமார் 27, மற்றும் ஐயப்பன் 25, என தெரியவந்தது.
செல்வ குமரேசன் மூன்று மாதங்களுக்கு முன்பு சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது குடிபோதையில் தகராறு செய்த முப்பிடாதி, முத்துகுமார் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமுற்று வீட்டை தாக்கினர்.
டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவின் பேரில், எஸ்.பி. சிலம்பரசன் மேற்பார்வையில் தனிப்படையினர் மூன்று குற்றவாளிகளையும் பதுங்கியிருந்த இடத்திற்கு தேடிச் சென்றனர்.
ஒரு கட்டடத்தில் மாடியில் இருந்தவர்கள் போலீசை கண்டதும் குதித்து தப்பினர். இருப்பினும் அவர்களை போலீசார் கைது செய்து கொண்டு வந்தனர். மாடியில் இருந்து குதித்ததால் மூவருக்கும் கால், கைகளில் முறிவு ஏற்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.

