/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை கலெக்டரை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம்
/
நெல்லை கலெக்டரை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம்
நெல்லை கலெக்டரை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம்
நெல்லை கலெக்டரை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம்
ADDED : அக் 10, 2024 02:13 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன், அரசு அலுவலர்கள் குறிப்பாக பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும் ஒருமையில் வசை பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
வருவாய்த் துறை அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக 17ஏ, பி குற்றச்சாட்டுகளை அதிக எண்ணிக்கையில் வழங்கியுள்ளார். கலெக்டரை கண்டித்தும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மாரிராஜா, மாநில செயலர் சுப்பு பங்கேற்றனர். பொதுச்செயலர் சங்கரலிங்கம் கோரிக்கை குறித்து பேசினார். 10 மாவட்டங்களில் இருந்தும் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் மாலை 5:00 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அறையை முற்றுகையிட, ஊழியர்கள் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் அங்கு இல்லை; அவர் சென்னை சென்றிருந்தார்.

