/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருடு போன நகை தாமாக திரும்பி வந்தது
/
திருடு போன நகை தாமாக திரும்பி வந்தது
ADDED : டிச 24, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே வீட்டில் திருடு போன நகை, போலீஸ் விசாரணைக்கு பிறகு தாமாக வீடு வந்து சேர்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரையைச் சேர்ந்த பிரான்சிஸ் 48. மீனவர். வீட்டை பூட்டாமல் கதவை சாத்திவிட்டு நேற்று முன்தினம் காலை சர்ச்க்கு சென்றிருந்தார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போனது.
கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். இதனிடையே நகையை திருடிய நபர்கள், நகை முழுவதையும் நேற்று காலை பிரான்சிஸ் வீட்டுக்குள் வீசிச் சென்றனர். நகை திரும்ப கிடைத்ததால் பிரான்சிஸ் மகிழ்ச்சி அடைந்தார்.