/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோயில் அருகே டூவீலர் தீப்பற்றி எரிந்தது
/
நெல்லையப்பர் கோயில் அருகே டூவீலர் தீப்பற்றி எரிந்தது
நெல்லையப்பர் கோயில் அருகே டூவீலர் தீப்பற்றி எரிந்தது
நெல்லையப்பர் கோயில் அருகே டூவீலர் தீப்பற்றி எரிந்தது
ADDED : பிப் 16, 2025 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் அருகே பூக்கடைக்காரரின் டூவீலர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகில் பூக்கடை நடத்தி வருபவர் கண்ணன். நேற்று காலை இவரது டூவீலரில் சரவணன் என்பவர் ஜங்ஷனுக்கு சென்று பூக்களை வாங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்தார். கோயில் வாசலில் வண்டியை நிறுத்தினார்.
அப்போது நிறுத்தப்பட்ட வண்டி திடீரென தீப்பற்றிக் கொண்டது. அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது. டவுன் போலீசார் விசாரித்தனர்.