sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதை இளைஞர் காங்.,கோரிக்கை

/

பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதை இளைஞர் காங்.,கோரிக்கை

பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதை இளைஞர் காங்.,கோரிக்கை

பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதை இளைஞர் காங்.,கோரிக்கை


ADDED : ஆக 01, 2011 01:59 AM

Google News

ADDED : ஆக 01, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்வார்குறிச்சி : பொட்டல்புதூரில் ஒருவழிப் பாதையை அமல்படுத்த வேண்டுமென இளைஞர் காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.தெற்குகடையம் இளைஞர் காங்., தலைவர் பாரதிராஜன் உயரதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-கடையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பொட்டல்புதூர்.

இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு மேலப்பாளையம், பாளை., தென்காசி, கடையநல்லூர், நெல்லை உட்பட தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வந்து தொழுகை நடத்துவது விசேஷமாகும்.மேலும் பொட்டல்புதூரை சுற்றியுள்ள நெல்கட்டும்பாறை, வெள்ளிகுளம், துப்பாக்குடி, ஏ.பி.நாடானூர், செல்லப்பிள்ளையார்குளம், வள்ளியம்மாள்புரம், தெற்குமடத்தூர், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், சம்பன்குளம், சிவசைலம் உட்பட சுமார் 60 கிராமத்தை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் பொட்டல்புதூருக்கு வருவார்கள்.மேலும் இவ்வூர் மிக முக்கியமான வியாபார ஸ்தலமாகும். சுற்றுக் கிராமத்திலுள்ள விவசாயிகள் இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தங்கள் காய்கறிகளை விற்பனை செய்ய வருவது வழக்கம். மேலும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் பலசரக்குகள் வாங்கவும் பொட்டல்புதூருக்கு தான் வரவேண்டும்.எப்போதும் ஜனநடமாட்டம் அதிகமாக உள்ள இப்பகுதியில் தென்காசியிலிருந்து முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் வழியாக அம்பாசமுத்திரம், வி.கே.புரம் செல்லும் வாகனங்களும், அம்பாசமுத்திரம் மற்றும் நெல்லை, முக்கூடல் வழியாக பொட்டல்புதூர் வந்து கடையம், தென்காசி செல்லும் வாகனங்களும் பொட்டல்புதூரில் எதிர் எதிரே வரும்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து மேல பஸ் ஸ்டாப் வரையுள்ள குறுகலான இடங்களில் மிகவும் நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.இவ்வாறு அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுவதால் பலமுறை பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டின் இருபுறங்களிலும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாலும் கடும் இடையூறு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதையை அமல்படுத்தினால் தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.தென்காசி, செங்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள் மேல பஸ் ஸ்டாப்பில் இருந்து இடதுபுறம் ரோடு வழியாக ஆர்.சி.சர்ச் முன் திரும்பி சந்தை பொட்டல் வழியாக வரவேண்டும். அம்பாசமுத்திரம், வி.கே.புரம், சேரன்மகாதேவியில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல் நேரடியாக செல்ல வேண்டும். இந்த ஒருவழிப்பாதையை அமல்படுத்தாவிட்டால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.எனவே பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பொட்டல்புதூரில் ஒருவழிப்பாதையை ஏற்படுத்தி தரவேண்டும் என இளைஞர் காங்., சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us