/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஆக 01, 2011 02:06 AM
அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரம் லயன்ஸ் சங்கத்தில் 2011-12ம் ஆண்டிற்கான
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.புதிய தலைவராக ராஜகோபாலன்,
செயலாளராக லிங்கராஜ், பொருளாளராக ஆறுமுகம், துணை தலைவர்களாக கிருஷ்ணன்,
சுப்புராமன், ரசூல் முகம்மது, மெம்பர் சிப் கமிட்டி தலைவராக மார்ட்டின்,
துணை தலைவராக சிவராமன், இயக்குனர்களாக லட்சுமிநாராய ராஜா, வாசுதேவ ராஜா,
ராமசாமி, வில்லியம் ஜெயராஜ், உறுப்பினராக சேகர், டெயில் டூஸ்டராக காந்தி
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் கவர்னர்
முருகப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர்
சுரேஷ் குமார் பேசினார். டாக்டர் லோகநாதர், டாக்டர் ரவீந்திரன்,
காசிவிஸ்வநாதன், நாகூர் மைதீன், மகேஷ் பாபு, ரமேஷ்ராம், மாரியப்பன்,
நம்பிராஜன், மீனா ராஜா, சக்கரவர்த்தி உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டனர்.அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், கண்
தானம் அளித்த மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள்
குடும்பத்தினரும், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வரும் தங்கராஜூம்
கவுரவிக்கப்பட்டனர். முதியோர் இல்லங்களுக்கு பாத்திரங்கள் வழங்கப்பட்டன.