/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பண்பொழி பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கல்
/
பண்பொழி பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கல்
ADDED : செப் 17, 2011 02:50 AM
கடையநல்லூர் : பண்பொழி இ.மசூது ராவுத்தர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் லேப்டாப் வழங்கினார்.கடையநல்லூர் தொகுதி பண்பொழி இ.மசூது ராவுத்தர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி சசிகலா வரவேற்றார்.விழாவில் பள்ளி தலைமையாசிரியை பிரேமாவதி, மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, சாம்பவர்வடகரை டவுன் பஞ்., துணைத் தலைவர் மூர்த்தி, கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், பண்பொழி பேரூர் செயலாளர் பரமசிவன், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் உட்பட பலர் பேசினர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கி தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:-''தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒரே நிலையில் வாழும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கல்வித்தரத்தில் நகர்புற மாணவர்களை போன்று கிராமப்புற மாணவர்களும் உயர்வடையும் வகையில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் வாழ்க்கைத்தரம் மேன்மைப்படும் விதத்தில் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்படுமென தேர்தல் நேரத்தில் தெரிவித்த வாக்குறுதியின்படி வழங்கிட உத்தரவிட்டார்.அதனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்பினை மாணவ, மாணவியர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். பண்பொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.விழாவில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, முத்துக்குமார், வக்கீல் குமார்பாண்டியன், வக்கீல் பிரிவு மாடசாமி பாண்டியன், தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மின்வாரியம் கோட்ட செயலாளர் கே.பி.எம். துரை, அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், வடகரை ரஜப்முகமது, லியாகத்அலி, வடகரை செயலாளர் அலியார், செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன், கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, ஏபிஆர்ஓ நவாஸ்கான், வக்கீல் அருள்ராஜ் மற்றும் பண்பொழி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சிக்குழுவினர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.