/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீடியோவில் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை
/
வீடியோவில் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை
ADDED : அக் 22, 2025 07:49 PM

திருநெல்வேலி: இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர் வீடியோ வெளியிட்டதால், மன உளைச்சலில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிரேம்சரண். இவரது மனைவி முத்துலட்சுமி, 26. இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்தது. முத்துலட்சுமி தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை முத்துலட்சுமி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குளம் போலீசார் விசாரணையில், முத்துலட்சுமிக்கு, பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரியை சேர்ந்த நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்ததும், இருவரும் இணைந்து, வீடியோ எடுத்ததும், அதை அடிப்படையாக கொண்டு அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
முத்துலட்சுமி தன் நகைகளை விற்று 4 லட்சம் ரூபாய் வரை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். அவர்கள் பழகிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அவமானத்தில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், மருதம்புத்துாரை சேர்ந்த சிலரது பெயர்களை குறிப்பிட்டு தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.