/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இன்ஜினியரை தாக்கி நகை பறித்த மூவர் கைது
/
இன்ஜினியரை தாக்கி நகை பறித்த மூவர் கைது
ADDED : அக் 22, 2024 06:52 AM
திருநெல்வேலி : ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் நட்பை ஏற்படுத்திக் கொள்ள ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த இன்ஜினியர் ஆகாஷ், 23, என்பவர் அந்த ஆப் மூலம் சிலரிடம் நட்பு ஏற்படுத்தினார். அதில் பழகிய மூவர் ஆகாஷை, ரஹ்மத்நகர் பகுதிக்கு இரவில் வரவழைத்தனர்.
அவர் வந்ததும் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினர். அவர் மறுத்ததால் மூவரும் அவரைத் தாக்கி, அவரிடம் இருந்த மொபைல் போன், 43,000 ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை பறித்துச் சென்றனர்.
ஆகாஷ் புகாரில் போலீசார், ரஹ்மத்நகரை சேர்ந்த ஜாபர் சாதிக், 19, சீவலப்பேரி மறுகால்தலையைச் சேர்ந்த வைகுண்டராஜா, 22, ஐகிரவுண்ட் கார்த்திகேயன், 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
'திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த முறைகேடான செயலி வாயிலாக, தினமும் பணம், நகை பறிப்புடன் இளைஞர்கள் கொலை வெறி தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர் என்பது வேதனையானது' என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

