ADDED : ஏப் 24, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தென்காசி அருகே குளத்தில் மீன்பிடித்த தகராறில், வாலிபர் கொல்லப்பட்டார். மூவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம், பாப்பான்குளம் அருகே செல்லப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் மாதவன், 24; கூலித் தொழிலாளி. இவர், சில தினங்களுக்கு முன், சிவஞானபுரத்தில் உள்ள குளத்தில், நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சிவஞானபுரத்தைச் சேர்ந்த தங்க நாராயணன், அருள், பாலமுருகன் ஆகியோர், 'இங்கு வந்து எப்படி மீன் பிடிக்கலாம்' எனக்கேட்டு தகராறு செய்து, மாதவனை தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த மாதவன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்க நாராயணன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

