/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய மூவர் கைது
/
போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய மூவர் கைது
ADDED : அக் 13, 2025 11:31 PM

திருநெல்வேலி: தச்சநல்லுார் அருகே ஊருடையான் குடியிருப்பு காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய அருண்குமார், ஹரிஹரசுதன் ஆகியோரை ரோந்து போலீசார் கைது செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த அருண்குமாரின் தம்பி அஜித்குமார், 30, பெருமாள், 27, கிருஷ்ணபெருமாள், 19, வல்லவன்கோட்டை அருண், 22, சரண், 19, ஆகிய ஐந்து பேரும், நேற்று முன்தினம் மதியம், தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள கோவில் சுவர், கரையிருப்பு சோதனைச்சாவடி தடுப்பு இரும்பு பலகைகள், தென்கலம் கிராமம் ஆகிய மூன்று இடங்களிலும் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.
திருநெல்வேலி போலீசார், சரண், பெருமாள், அஜித்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அருண், கிருஷ்ணபெருமாள் ஆகியோரை தேடுகின்றனர்.