/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது
/
கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது
ADDED : ஜூலை 16, 2025 02:52 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் கரகாட்டக் கலைஞரை கொலை செய்த, அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி பழையபேட்டையை சேர்ந்தவர் வெற்றிவேல், 20. கரகாட்டத்திற்கு சென்று வந்தார். செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியிலும் வேலை பார்த்தார். இவரை, நேற்று முன்தினம் காணவில்லை. இந்நிலையில், நேற்று காலை, திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே நரியூத்து பரும்பு பகுதியில் இவரது உடல் கிடந்தது. மூக்கு, காதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. மானுார் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், வெற்றிவேலுடன், செப்டிங் டேங்க் கிளீனிங் வேலை செய்த நண்பர்களான, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து, 21, முக்கூடலைச் சேர்ந்த இசக்கிமுத்து, 23, பழைய பேட்டையை சேர்ந்த தங்ககுமார், 23, ஆகியோருடன், மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டது. இதில், வெற்றிவேலுவை தாக்கி கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசியது தெரிந்தது.
மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.