/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திசையன்விளையில் பிரேமலதா பிரசாரம்
/
திசையன்விளையில் பிரேமலதா பிரசாரம்
ADDED : செப் 30, 2011 02:26 AM
திசையன்விளை : திசையன்விளையில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்தார்.
திசையன்விளை டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் ஏ.எம்.கண்ணன் மற்றும் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திசையன்விளை அற்புதவிநாயகர் ஜங்ஷனுக்கு வருகை தந்தார். அங்கு அவர் பேசியதாவது: ''சட்டசபை தேர்தலில் எங்களுக்கு தந்த மாபெரும் வெற்றியை போல இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் வெற்றியை தந்து மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள். இங்கு திசையன்விளை டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஏ.எம்.கண்ணனுக்கும், 18 வார்டுகளில் போட்டியிடும் அனைத்து தேமுதிக வேட்பாளர்களுக்கும் முரசு சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தாருங்கள். மக்களுக்காக லஞ்ச ஊழல் இல்லாத ஒரு பேரூராட்சியை உருவாக்க மக்களாகிய நீங்கள் சரியான முறையில் முரசு சின்னத்தில் ஓட்டளியுங்கள்'' என்றார். நிகழ்ச்சியில் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், டவுன் பஞ்.,தலைவர் வேட்பாளர் ஏ.எம்.கண்ணன், நகர செயலாளர் செந்தில் சுரேஷ்குமார், அவைத்தலைவர் நிக்ஸன் விஜயகுமார், துணை செயலாளர் மாரிமுத்து, தொண்டரணி செயலாளர் வேல்முருகன், இளைஞரணி துணை செயலாளர் பேச்சிமுத்து, மாணவரணி துணை செயலாளர் பிரதீஷ்குமார், வெள்ளையன், சாந்தி ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.