/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
செங்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்
/
செங்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்
செங்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்
செங்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்
ADDED : செப் 30, 2011 02:26 AM
செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி பகுதிகளிலும், யூனியன் பகுதிகளிலும் நேற்று வேட்புமனுத்தாக்கல் கடைசிநாள் என்பதால் பதவிகளை கைப்பற்ற வேட்புமனுத்தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதியது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் என்பதையடுத்து செங்கோட்டை நகர பகுதி முழுவதும் நேற்று அரசியல் கட்சிகளின் கொடிகள் கட்டி காணப்பட்ட வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு எல்லாம் நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை பெருமளவு காணப்பட்டது.
இந்த நகராட்சியை பொறுத்தவரை முக்கிய அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் ஏற்கனவே செய்துவிட்டபோதிலும் கடைசி நேரத்தில் வேட்பாளர்களை அறிவித்த கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தனர். மேலும் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட விரும்பியோர் கூட்டம்தான் மிகுதியாக இருந்தது. செங்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்திலும் அதிகமான கூட்டம் காணப்பட்டது. இந்த யூனியனை பொறுத்தவரை 6 பஞ்.,கள் இருந்தபோதிலும் பஞ்., கவுன்சிலர் பதவிகளுக்குதான் இதுவரை அதிகளவில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.