/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்காசி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
தென்காசி : 'தென்காசி ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்' என தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.தென்காசி நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் அகமது தலைமை வகித்தார். நகர தலைவர் ஜலாலுதீன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மைதீன், செயலாளர் அப்துல் அஜிஸ், துணை செயலாளர் பஷீர் முகம்மது, பொருளாளர் சேக், நகர தொண்டரணி செயலாளர் முகம்மது ஷெரிப், நகர மாணவரணி செயலாளர் இஸ்மாயில், ரத்ததான பொறுப்பாளர் ஜலால், செய்தி தொடர்பாளர் செய்யது அகமது மற்றும் பலர் பேசினர்.கூட்டத்தில், நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரும் 1ம் தேதி பிறை தென்பட்டால் 2ம் தேதி நோன்பு வைப்பது என்றும், பிறை தென்படாவிட்டால் 3ம் தேதி நோன்பு துவங்கும் என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், தென்காசி ரயில்வே மேம்பால பணி மந்தமாக நடக்கிறது. இதனை கண்டிக்கிறோம். மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும். அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 4 காஸ் சிலிண்டர்தான் வழங்க முடியும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் செயலையும், மத்திய அரசையும் கண்டிக்கிறோம் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.