/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இலஞ்சி பாரத் பள்ளியில் கலை இலக்கிய விழா போட்டி
/
இலஞ்சி பாரத் பள்ளியில் கலை இலக்கிய விழா போட்டி
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
குற்றாலம் : இலஞ்சி பாரத் பள்ளியில் கலை இலக்கிய விழா போட்டி நடந்தது.இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14வது பெகாசஸ் 2011 கலை இலக்கிய விழா போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு டாக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசினார். பள்ளி முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், தாளாளர் மோகனகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் செல்வமலர் கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.கே.ஜி.வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் திறன்களை வெளிக் கொணரும் விதமாக போட்டி நடந்தது. உடையலங்காரம், பழங்கால கதை கூறல், இசைப்பாடல், ஓவியம், தனிநபர் நடனம், ஸ்பெல்பீ, வண்ணம் தீட்டுதல், அழகுப்போட்டி, ஆங்கில கட்டுரை ஒட்டியும், வெட்டியும் பேசுதல், வினாடி-வினா, வாசித்தல்திறன் போட்டி, குழு நடனம், புகைப்படமெடுத்தல், தமிழ் பேச்சு போட்டி, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இலஞ்சி ஆக்ஸிஸ் பாங்க் மேலாளர் பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன் செய்திருந்தனர்.