/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்காசி பகுதியில் ரூ.4.5 லட்சம் காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது
/
தென்காசி பகுதியில் ரூ.4.5 லட்சம் காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது
தென்காசி பகுதியில் ரூ.4.5 லட்சம் காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது
தென்காசி பகுதியில் ரூ.4.5 லட்சம் காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
தென்காசி : தென்காசி பகுதியில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பியை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின் காற்றாலை அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகளவில் காப்பர் கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி கீழப்புலியூர், ஆய்க்குடி, இலத்தூர் பகுதியில் மின்காற்றாலை அருகில் இருந்த காப்பர் கம்பிகள் அதிகளவில் திருடு போயின. இவற்றின் மதிப்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.இதுபற்றி காற்றாலை பாதுகாப்பு அதிகாரி வெள்ளத்துரை (47) என்பவர் தென்காசி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்தனர். காப்பர் கம்பி திருடியவர்களை கண்டுபிடிக்க தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, ஞானமுத்து, மாடப்பன், கிருஷ்ணன், போலீசார் ஹிதயத்துல்லா, மாரியப்பன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் தீவிர விசாரணையில் காப்பர் கம்பியை திருடியது இலஞ்சி வள்ளியூரை சேர்ந்த அருணாசலம் (48), வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்த ஆறுமும் (எ) நெட்டை ஆறுமுகம் (40) என்றும், இவர்கள் திருடிய காப்பர் கம்பியை அம்பாசமுத்திரம் சந்தை மடத் தெருவை சேர்ந்த ராஜகோபால நாடார் (60) என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பியை பறிமுதல் செய்தனர்.