/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிவந்திப்பட்டி அருகே கோயில் உண்டியல் திருட்டு
/
சிவந்திப்பட்டி அருகே கோயில் உண்டியல் திருட்டு
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
திருநெல்வேலி : சிவந்திப்பட்டி அருகே கோயில் உண்டியலை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.சிவந்திப்பட்டி அருகேயுள்ள நொச்சிக்குளத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது.
கடந்த 2 நாள்களுக்கு முன் வழக்கம் போல் பூசாரி ஆறுமுகம் கோயிலை திறந்துள்ளார். அப்போது அம்மனின் பொட்டுத்தாலி மாயமாகி இருந்தது. மேலும் குடம் உண்டியலும் சில அடி தூரம் கிடந்தது. அதில் இருந்த உண்டியல் பணமும் மாயமாகி இருந்தது.இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசில் பூசாரி ஆறுமுகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர். சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் உண்டியல் பணம் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.