/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
/
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
திருநெல்வேலி : பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்பது தொடர்பாக மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இன்று(24ம் தேதி) கரசேவையில் ஈடுபடுகின்றனர்.
இதைமுன்னிட்டு மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பேட்டையில் நவாப் வாலாஜா பள்ளிவாசலிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்ரமித்து வைத்துள்ளதாகவும், அந்த இடத்தை மீட்பதற்காக மனிதநேய மக்கள் முன்னனேற்ற கழகத்தினர் சார்பில் இன்று(24ம் தேதி) 'கரசேவை' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் தடை விதித்தனர்.
போலீசாரின் தடையை மீறி கரசேவை நடைபெறும் என அக்கட்சியினர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதையடுத்து கரசேவையில் ஈடுபடும் மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அக்கட்சியினரின் முக்கிய நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைøயாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.இதற்கிடையே,கடந்த சில நாட்களுக்கு முன் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலெக்டர் வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி கலெக்டர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் செய்யது அலி(35), பேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைதீன் அப்துல் காதர் மகன் செய்யது அலி(23) இருவரை கைது செய்தனர்.