/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பாளை.,யில் ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
பாளை.,யில் ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாளை.,யில் ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாளை.,யில் ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
திருநெல்வேலி : பாளை கே.டி.சி நகரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.கே.டி.சி நகர் வட பகுதி பொது நலச் சங்கம் சார்பில் கே.டி.சி நகர் ஹோலி கிரசன்ட் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது.பள்ளி தாளாளர் காதர் முகைதீன், சங்க செயலாளர் முத்தையா போட்டிகளை துவக்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர் லைலா பானு வரவேற்றார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர்.பொது நல சங்க உறுப்பினர்கள் சின்னதுரை, ராமலிங்கம், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் அதிமுக கிளை செயலாளர் சுந்தர்ராஜ், செல்லதுரை, ராமசாமி உட்பட பலர் பாராட்டினர்.உறுப்பினர் ராமலிங்கம் நன்றி கூறினார்.