/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ராணி அண்ணா கல்லூரி மாணவிகளுக்கு "ஸ்ரீலஹரி கிருஷ்ணா' சிலம்பாட்ட விருது

ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
திருநெல்வேலி : சிலம்பாட்டத்தில் சிறப்பு பெற்ற பழையபேட்டை ராணிஅண்ணா கல்லூரி மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.சத்தியநகரம் மனுஜோதி ஆசிரமத்தில் 42வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை கலை விழா நடந்தது.
சிலம்ப விளையாட்டின் வகைகளான அலங்கார சிலம்பம், போர்ச் சிலம்பம், தீச்சிலம்பம், ஆயுதப் பெருக்கம் ஆகியவற்றை நடத்திய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் சந்தனமாரி, பவுனியா, சுகிதா, புவனேஸ்வரி, ஐயம்மாள், மகாலெட்சுமி, சோபனா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.சிலம்ப விளையாட்டு விளையாடியவர்களை மனுஜோதி ஆசிரமத் தலைவர் பால் உப்பாஸ் லாறி பாராட்டி 'ஸ்ரீலஹரி கிருஷ்ணா விருது' வழங்கினார். விருதினை பெற்ற மாணவிகளை இந்திய தமிழ்நாடு சிலம்பு கழக தலைவர் பாபு, பெண் பயிற்சியாளர் ராஜூ, கல்லூரி முதல்வர் ஆயிஷா, எழில்ஜாஸ்மின், உதவி பேராசிரியை கலாகோபி, உடற்கல்வி இயக்குனர் சாரதா கலைமாமணி, ஜான்பாவா பாராட்டினர்.