/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சவுதி அரேபியாவில் பணி இந்திய டாக்டர்களுக்கு அழைப்பு
/
சவுதி அரேபியாவில் பணி இந்திய டாக்டர்களுக்கு அழைப்பு
சவுதி அரேபியாவில் பணி இந்திய டாக்டர்களுக்கு அழைப்பு
சவுதி அரேபியாவில் பணி இந்திய டாக்டர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 03, 2011 12:31 AM
திருநெல்வேலி : சவூதி அரேபியாவில் பணிபுரிவதற்கு இந்திய டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ மையங்களில் பணிபுரிவதற்கு அனைத்து பிரிவு மருத்துவம், அறுவை சிகிச்சை, ரேடியாலஜி, பாதாலஜி, பல் மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர மருத்துவ பிரிவுகளில் ஆலோசகர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் இருப்பிட டாக்டர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது.
தேர்வு செய்யப்படும் டாக்டர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், குடும்ப விசா மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கான தகுதி தேர்ச்சிக்கு பிறகு 2 ஆண்டுகள் வேலை அனுபவம் உள்ள 55 வயதிற்கு உட்பட்ட கன்சல்டன்ட்கள், ஸ்பெஷலிஸ்ட்கள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட ரெசிடென்ட் டாக்டர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் ஒரு போட்டோவை இணைத்து வமெலயநகலரடந.யவல என்ற வெப்சைட் மூலமாக வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதுசம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய தீதீதீ.வலமலரஙனவதீமச.யவல எஎன்ற வெப்சைட்டை பார்க்கலாம். அல்லது 044-24464268/24464269 என்ற டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.