/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு விழா
/
தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு விழா
ADDED : ஆக 06, 2011 01:54 AM
திருநெல்வேலி : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு விழா மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி வளாகத்தில் நடந்தது.மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி., தேர்வு எழுதி மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவர் சதாம் உசேனுக்கு சாரா டிரஸ்டின் சார்பில் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேக் முகம்மது தலைமை வகித்தார். தாளாளர் முகம்மது அபுபக்கர், முஸ்லிம் கல்விக் கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத் முன்னிலை வகித்தனர்.மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் காஜா முஹைதீன் பாகவி வாழ்த்துரை வழங்கினார். நெல்லை சாரா ஜீவல்லர்ஸ் பங்குதாரர் முகம்மது நாசர், முகைதீன் அப்துல் காதர் சாதனை படைத்த மாணவர் சதாம் உசேனுக்கு தங்க நாணயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.விழாவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் சாதிக், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அப்துல் கபூர் ஜபருல்லாகான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.