/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
10 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிப்பு : இன்முகத்துடன் சிகிச்சை அளிக்க அப்துல் கலாம் "அட்வைஸ்'
/
10 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிப்பு : இன்முகத்துடன் சிகிச்சை அளிக்க அப்துல் கலாம் "அட்வைஸ்'
10 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிப்பு : இன்முகத்துடன் சிகிச்சை அளிக்க அப்துல் கலாம் "அட்வைஸ்'
10 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிப்பு : இன்முகத்துடன் சிகிச்சை அளிக்க அப்துல் கலாம் "அட்வைஸ்'
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகளுக்கு இன்முகத்துடன் டாக்டர்கள் சிகிக்சை அளிக்க வேண்டும் என்று பாளையில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க 59வது ஆண்டு மாநாடு 'நெல்லை சந்திப்பு' நிகழ்ச்சி பாளை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை நடந்தது. சங்க தலைவர் (தேர்வு) டாக்டர் கந்தையா தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் டாக்டர் சித்தார்த்தன் ஆண்டறிக்கை படித்தார். வணிக கண்காட்சியை அமைப்பு கமிட்டி புரவலர் டாக்டர் நம்பெருமாள்சாமி துவக்கி வைத்தார்.இதில் 59வது மாநில மாநாட்டை குத்துவிளக்கேற்றி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:இந்தியாவில் கண் பாதுகாப்பு என்பது வளர்ச்சி பெறும் நிலையில் உள்ளது. பொதுவாக மருத்துவ துறையில் சிகிச்சை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கை என்ற இரு நிலைகளில் செயல்படுத்தப்படுகிறது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை முறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள்ளும், குறைந்த செலவிலும் மேற்கொள்ள வேண்டும். மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் முன் தடுப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. மருத்துவ துறையில் பயிற்சிகளும் உரிய முக்கியத்துவம் பெறுகிறது.தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் கண் பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கண் டாக்டரும் நோயாளிகளுக்கு சிரித்த முகத்துடன் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கண் டாக்டரும் ஆண்டு தோறும் குறைந்தது 10 முதல் 10 தீவிர கண் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து கண்ணொளி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை டாக்டர்கள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு கண் டாக்டர்கள் சங்கம் தமிழகத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளையும் உள்ளடக்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 500 கூடுதல் கண் பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.மகாராஷ்டிரா கோலாபூரில் வாரணாவேலி பகுதியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு இயக்கமாக செயல்பட்டு சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். வாரணா பூரா காம்பளக்ஸ் பகுதி மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள லாப நோக்கு எதுவும் இல்லாமல் மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் சிறிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி தற்போது நவீன மருத்துவ வசதிகளுடன் 27 ஏக்கர் நிலப் பரப்பில் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, ரேடியாலஜி உட்பட பல்வேறு மருத்துவ துறைகளில் சேவைகளை அளித்து வருகிறது. தமிழ்நாடு கண் டாக்டர்கள் சங்கமும் இதுபோன்ற சேவைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தற்போதைய சூழ்நிலையில் கண் மருத்துவத்தில் 'குளுக்கோமா' நோய் பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. உலக அளவில் சுமார் 65 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள் பொதுவாக குறுகிய நோக்கு குளுக்கோமா நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 2020 தொலை நோக்கு பார்வை திட்டத்தின் கீழ் குளுக்கோமா நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஐதராபாத் மற்றும் மதுரை விஞ்ஞானிகள் இந்நோய்க்கு காரணமான குறிப்பிட்ட ஜீன் வகையான 'ஆப்டி-நியூரான் மற்றும் சிஒய்பி1பி1'ஐ கண்டறிந்துள்ளனர். திருநெல்வேலி பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் முன்கூட்டியே இந்நோயை கண்டறியும் நவீன உபகரணங்கள் உள்ளது.ஆஸ்பத்திரி சூழலை பொறுத்தவரை தினமும் நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இதுசம்பந்தமான புள்ளி விபரங்களை சேகரித்தால் கண் மருத்துவம் மட்டுமல்லாது மற்ற மருத்துவ துறை ஆய்வாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். கண் டாக்டர்கள் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் கண் ஆய்வு குழு குழுவை அமைத்து உரிய புள்ளி விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த விபரங்களின் மூலம் முன்கூட்டியே கண் நோய்களை தடுக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் தரமான கண் மருத்துவ சிகிச்சை இந்திய மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் பரவி புகழ் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்திய கண் டாக்டர்கள் தெற்காசிய நாடுகளில் உரிய நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் தூதுவர்களாக செயல்பட்டு தெற்காசிய நாடுகளில் அமைதிக்கும் உறுதுணையாக செயல்படுகின்றனர்.கண் மருத்துவ துறையில் உலக அளவிலான நவீன சிகிச்சை முறைகளை புகுத்த வேண்டும். இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் உலக தரத்திலான சிறப்பு ஏவுகணை திட்டங்ள் யெல்படுத்தப்படுகிறது. குருட்டு தன்மையை ஒழிக்க இந்திய, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகிது. கிராமப்புற நோயாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் நடமாடும் கண் மருத்துவ குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.ஒவ்வொரு கண் மருத்துவரும் நோயாளின் கண் பார்வைக்கு ஒளி ஏற்றவும், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கவும், கிராமப்புறங்களில் ஆண்டு தோறும் 30 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உறுதிமொழியை மேற்கொண்டால் ஆரோக்கியமான கண் பாதுகாப்பு சமுதாயத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி பேசினார்.இதில் அறிவியல் பாதுகாப்பு விஞ்ஞானி நடராஜன், டாக்டர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் மீனாட்சி நன்றி கூறினார்.கண் மருத்துவ துறையில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை அப்துல்கலாம் வழங்கினார்.