/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லாக்பால் மசோதா தாக்கல் கருத்து கூற கலாம் மறுப்பு
/
லாக்பால் மசோதா தாக்கல் கருத்து கூற கலாம் மறுப்பு
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : லோக்பால் மசோதா தாக்கல் குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து கூற மறுத்தார்.தமிழ்நாடு கண் டாக்டர்கள் சங்க 59வது மாநில மாநாடு பாளை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது.
இந்த மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்தார். நெல்லைக்கு வந்த கலாமை, கலெக்டர் செல்வராஜ், போலீஸ் கமிஷனர் வரதராஜூ மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் மருத்துவ துறையில் டாக்டர்களின் சேவைகள், சமுதாயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விளக்கமாக பேசினார்.விழாவில் பாடல் பாடிய மாணவிகளை அழைத்து அவர்களுடன் 'குரூப் போட்டோ' எடுத்து கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வி, நலம் குறித்து கேட்டறிந்தார்.நிகழ்ச்சி முடிவடைந்ததும் அப்துல் கலாமிடம், லோக்பால் மசோதா தாக்கல் குறித்து நிருபர்கள் கேட்ட போது, அதற்கு பதில் கூற மறுத்தார். தொடர்ந்து கண் பற்றி கேளுங்கள் என்று கூறி அங்கிருந்து வேகமாக சென்றார்.தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள் கண்காட்சியையும் அப்துல் கலாம் பார்வையிட்டார். பின்னர் கார் மூலம் மாலை சுமார் 6.30 மணிக்கு கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றார்.முன்னாள் ஜனாதிபதி வருகையையொட்டி பாளை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெல் பள்ளி வளாகத்தில் மெடல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டன.