/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தியாகராஜநகர் நூலக கட்டட விரிவாக்கம் எம்.பி., ரங்கராஜன் ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு

ADDED : ஆக 06, 2011 01:56 AM
திருநெல்வேலி : பாளை.
தியாகராஜநகர் நூலக விரிவாக்கத்திற்கு எம்.பி., ரங்கராஜன் 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.நெல்லை மாநகராட்சி 19வது வார்டு தியாகராஜநகர் நூலகக்கட்டடத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்க, வாசகர்கள் அமர்ந்து புத்தகங்கள் படிக்க போதுமான இடவசதி இல்லை. நூலகத்தில் விரிவாக்கக்கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து தியாகராஜநகர் பொதுநலச்சங்கம் சார்பில் எம்.பி., டி.கே. ரங்கராஜனுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிறைவேற்ற மா.கம்யூ., மாவட்டச்செயலாளர் பழனி, கவுன்சிலர் தியாகராஜன் ஆகியோர் எம்.பி., யிடம் வலியுறுத்தினர். இதையடுத்து நூலக கட்டட விரிவாக்கத்திற்கு 7 லட்சம் ரூபாயை எம்.பி., ரங்கராஜன் ஒதுக்கீடு செய்துள்ளார்.இத்தகவலை தியாகராஜநகர் பொதுநலச்சங்கத்தலைவர் செந்தூர்நாதன் தெரிவித்தார்.