/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து போராட்டம்
/
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து போராட்டம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து போராட்டம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து போராட்டம்
ADDED : ஆக 11, 2011 02:21 AM
திருநெல்வேலி : 'போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து விரைவில் போராட்டம் நடக்கும்' என தொ.மு.ச., பேரவை தலைவர் குப்புசாமி பேசினார்.
நெல்லை வண்ணார்பேட்டை அரசுப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தொ.மு.ச., பேரவை சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. பேரவை தலைவர் குப்புசாமி பேசும்போது, ''அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் அரசுப்போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை அதிமுக தொழிற்சங்கம் நடத்துவது போல மாயத்தோற்றம் ஏற்பட்டுள்ளது. தொ.மு.ச.,வினர் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றனர்.
பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொ.மு.ச.,வில் உள்ளனர். அவர்களுக்கு வேலை அளிப்பதில்லை. நிர்வாக அடக்குமுறை உச்சக்கட்டத்தில் உள்ளது. ஒப்பந்தத்தை மீறி செயல்படுகின்றனர். இதுகுறித்து அனைத்து கோட்டங்களில் இருந்து புகார்கள் வருகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் அரசை கண்டித்து போராட்டம் நடக்கும். இதுகுறித்து சென்னையில் அறிவிக்கப்படும்'' என்றார். பொதுச்செயலாளர் சண்முகம், துணை பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, செயலாளர் நடராஜன், மாவட்ட கவுன்சில் தலைவர் நடராஜன், துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சுந்தரம், துணைச்செயலாளர் ஜாய்ஆல்பர்ட், போக்குவரத்துக்கழக தொ.மு.ச., தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் தர்மன், பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், அப்புரெட்டி, பூல்பாண்டி, துணை பொதுச்செயலாளர் பலவேசம், ஸ்டாலின் மாடசாமி, முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜெயக்குமார், பிரசார செயலாளர் சம்பத், துணைச்செயலாளர் அந்தோணிசாமி, மாரியப்பன், மணிராஜ், சண்முகசுந்தரம், நடராஜன், அழகர், கிருஷ்ணசாமி, கிளைச்செயலாளர்கள் பேசினர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.