/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாட்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு.,பங்கேற்காது
/
வாட்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு.,பங்கேற்காது
வாட்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு.,பங்கேற்காது
வாட்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு.,பங்கேற்காது
ADDED : செப் 06, 2011 01:08 AM
திருநெல்வேலி : வாட்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நாளை(7ம் தேதி) பீடித்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு.,சங்கத்தினர் ஈடுபடமாட்டார்கள் என சிஐடியு.,தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் மாநில பொதுசெயலாளர் ராஜாங்கம் கூறினார்.
இதுகுறித்து பாளை.யில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிப்படை சம்பளம்,பஞ்சப்படி உயர்வு வழங்குவதற்கு பீடி நிர்வாகத்தினருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் நெல்லை மாவட்ட பீடி நிர்வாகத்தினர் ஒப்பந்தகூலியை வழங்காமல் கடந்த 10 மாதங்களாக தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பீடிக்கு 14 சதவீதம் வாட்வரி விதித்துள்ளது. வாட்வரி விதிக்கப்பட்ட உடனே ஆயிரம் பீடிக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லையில் பீடி நிர்வாகத்தினர் தொழிலாளர்களை திரட்டி வாட்வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். பீடி நிர்வாகத்தினர் தங்களது பினாமி சங்கத்தின் பெயரில் பீடி தொழிலாளர்களை நிர்பந்தம் செய்து தொழிலாளர்களை திரட்டுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட சிஐடியு.,பீடி தொழிலாளர்கள் சம்மேளம் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை,தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள பீடி நிர்வாகத்தினர் ஒப்பந்த கூலியை அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியு.,சார்பில் அனைத்து ஒன்றியம், தாலுகா தலைநகரங்களில் வரும் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பீடித்தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள். இவ்வாறு ராஜாங்கம் கூறினார். அப்போது சிஐடியு.,மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், பீடித்தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திருச்செல்வன் உடனிருந்தனர்.