/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டவுனில் நடந்து சென்ற பெண்ணிடம் 9பவுன் நகை பறிப்பு; 3பேர் கைது
/
டவுனில் நடந்து சென்ற பெண்ணிடம் 9பவுன் நகை பறிப்பு; 3பேர் கைது
டவுனில் நடந்து சென்ற பெண்ணிடம் 9பவுன் நகை பறிப்பு; 3பேர் கைது
டவுனில் நடந்து சென்ற பெண்ணிடம் 9பவுன் நகை பறிப்பு; 3பேர் கைது
ADDED : செப் 11, 2011 12:43 AM
திருநெல்வேலி : நெல்லை டவுனில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன், சிக்கந்தர்புரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி முத்தரசி(23). இவர் கடந்த 8ம்தேதி காலை கரியமாணிக்க பெருமாள் கோயில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது டவுன், சம்பந்தர் தெருவில் நடந்து சென்ற போது, அந்த வழியாக பைக்கில் வந்த 3பேர், முகவரி விசாரிப்பது போல் நடித்து, முத்தரசியிடமிருந்து 9பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். முத்தரசி கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் நகையை பறித்தவர்களை விரட்டினர். இதில் 2பேர் பைக்கில் தப்பி சென்றனர். தெருவிற்குள் ஓடிய ஸ்ரீவைகுண்டம்,வெள்ளூரை சேர்ந்த முருகனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சேதுராமன், மாடசாமி, உடையார், ஏட்டு மாடசாமி மற்றும் போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகனுடன் சேர்ந்து தோழப்பன் பண்ணை கருப்பசாமி, வெள்ளூர் பாலமுருகன் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், முருகன், கருப்பசாமி, பாலமுருகன் ஆகியோரை கைது செய்ததோடு, 9 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கைதான 3பேருக்கு வேறு ஏதேனும் வழிப்பறி வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.