/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குற்றாலம் அருகே பஸ்சின் டயரில் சிக்கி இருவர் படுகாயம்
/
குற்றாலம் அருகே பஸ்சின் டயரில் சிக்கி இருவர் படுகாயம்
குற்றாலம் அருகே பஸ்சின் டயரில் சிக்கி இருவர் படுகாயம்
குற்றாலம் அருகே பஸ்சின் டயரில் சிக்கி இருவர் படுகாயம்
ADDED : செப் 19, 2011 12:01 AM
குற்றாலம் : குற்றாலம் அருகே பஸ்சின் டயரில் சிக்கி இருவர் படுகாயமடைந்தனர்.
சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா மனைவி பேச்சியம்மாள் (50). செங்கோட்டை பம்புஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் முகம்மது மகன் முகைதீன் அஸ்கர்அலி(14). இவர்கள் இருவரும் தென்காசியிலிருந்து செங்கோட்டை வழியாக புளியரை செல்லும் பஸ்சில் செங்கோட்டை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கொட்டாகுளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி மீண்டும் பஸ் ஏறும்போது எதிர்பாரதவிதமாக பஸ் புறப்படவே பேச்சியம்மாள் மற்றும் முகைதீன் அஸ்கர்அலி ஆகிய இருவரின் கால் மீதும் பின் டயர் ஏறியதில் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குபதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.