ADDED : செப் 19, 2011 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டியன் மகன் குமார் (16). இவர் வீட்டில் நேரம் போகாமல் டி.வி.பார்க்க முயன்றுள்ளார். அப்போது டி.வி.க்கு பவர் சப்ளை வரவில்லை. இதுகுறித்து பிளக் வயரினை பிரித்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி குமார் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.