/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ராதாபுரம் கடற்கரை கிராமங்களில்அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கை
/
ராதாபுரம் கடற்கரை கிராமங்களில்அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கை
ராதாபுரம் கடற்கரை கிராமங்களில்அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கை
ராதாபுரம் கடற்கரை கிராமங்களில்அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 30, 2011 02:13 AM
திசையன்விளை:கடற்கரை மீனவ கிராமங்களில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என எம்எல்ஏ., மைக்கேல்ராயப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ., மைக்கேல் ராயப்பன் மீன்வளத்துறை அமைச்சருக்கு
விடுத்துள்ள கோரிக்கை கூறியிருப்பதாவது:நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம்
தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும்தான் கடற்கரை மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு வாழும் மீனவ மக்கள் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டால் சற்று
தொலைவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தான் சென்று சிகிச்சை பெற வேண்டிய
நிலை உள்ளது.குடும்ப தலைவர் மீன்பிடித்தொழிலுக்கு சென்றுவிட்டால் உடல் நலம்
பாதிக்கப்படும் நபர்களை பெண்கள் அழைத்து செல்ல மிகவும் சிரமப்படுவதால்
மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களான கூட்டப்புளி, இடிந்தகரை,
கூத்தன்குழி, உவரி மீனவ கிராமங்களில் அரசு ஆஸ்பத்திரி அமைத்து கொடுத்தால்
மீனவ மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.இவ்வாறு மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.