/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கரிவலம்வந்தநல்லூரில் கிராம சபை கூட்டம்
/
கரிவலம்வந்தநல்லூரில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 22, 2011 02:19 AM
திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் பஞ்.,சில் கிராம சபை கூட்டம்
நடந்தது.கூட்டத்திற்கு கரிவலம்வந்தநல்லூர் பஞ்., தலைவர் பால்ராஜ் தலைமை
வகித்தார்.
சங்கரன்கோவில் யூனியன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
திட்டம் துணை பி.டி.ஓ.கொண்டல்சாமி முன்னிலை வகித்தார். பஞ்., உதவியாளர்
மாரிமுத்து அஜண்டா வாசித்தார்.கூட்டத்தில், அனைத்து வீடுகளிலும்
கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல், அனைத்து பள்ளிகள்,
அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், அனைத்து அலுவலகங்களிலும்
சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், இந்திரா நினைவு
குடியிருப்பு பயனாளிகள் தேர்வு, தேவையான இடங்களில் சிமென்ட் சாலை அமைத்தல்,
பஞ்., அலுவலகத்தை பராமரித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பஞ்.,துணைத் தலைவர் சண்முகத்தாய், பஞ்.,
உறுப்பினர் ஆறுமுகம், மக்கள் நலப்பணியாளர் கோவிந்தராஜன், கால்நடை டாக்டர்
முருகன், வி.ஏ.ஓ.செல்வசேகரன், கிராம உதவியாளர் கருப்பையா,
வாழ்ந்துகாட்டுவோம் திட்ட கணக்காளர் தங்கமாடத்தி, சத்துணவு அமைப்பாளர்
கிருஷ்ணன், பாரதிநகர் அங்கன்வாடி பணியாளர் லதா மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.