/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உழவர் பாதுகாப்பு திட்டம்விவசாயிகள் வரவேற்பு
/
உழவர் பாதுகாப்பு திட்டம்விவசாயிகள் வரவேற்பு
ADDED : ஆக 22, 2011 02:22 AM
குற்றாலம்:விவசாய தொழிலாளர் வாரியம் கலைத்து மீண்டும் உழவர் பாதுகாப்பு
திட்டம் கொண்டு வந்ததை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.கடந்த அதிமுக ஆட்சியின்
போது விவசாய தொழிலாளர்கள் நலன் கருதி உழவர் பாதுகாப்பு திட்டத்தை
அமல்படுத்தியது. இத்திட்டம் துவங்கிய ஆறுமாத காலத்தில் 66 லட்சம்
குடும்பங்களை சேர்ந்த 2.2 கோடி உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவியேற்றவுடன்
அதிமுக கொண்டு வந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து அதற்கு
பதிலாக தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் விவசாயிகள் சமூக நல பாதுகாப்பு
திட்டம் 2006 என ஒரு திட்டத்தை கொண்டு வந்து
செயல்படுத்தியது.இத்திட்டத்தின் மூலம் ஏழை விவசாய தொழிலாளர்கள் மகன் திருமண
உதவித் தொகை ரூ.5 ஆயிரமும், மகள் திருமண உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும்,
மகப்பேறு உதவித் தொகையாக ரூ.6 ஆயிரமும், விவசாய தொழிலாளர் இறந்தால்
ஈமக்கிரியை மற்றும் இழப்பீடு தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாயும் வருவவாய்
துறைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணைக்குப்பின் வாரியத்திற்கு சென்றது.
பல அலைக்கழிப்புகளுக்கு பின் வாரியம் மூலம் பணம் பெற வேண்டி இருந்தது.
இதில் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்தது.இத்திட்டத்தில் ஐந்து
ஆண்டுகளில் 1.86 லட்சம் உறுப்பினர்கள்தான் இருந்துள்ளனர். ஐந்தாண்டுகளில்
விவசாய தொழிலாளர் உறுப்பினர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாலும்,
சரிவர செயல்படாததாலும் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் பல்வேறு
எதிர்ப்புக்கு இடையே மசோதா நிறைவேற்றம் சட்டசபையில் இயற்றப்பட்டு விவசாய
தொழிலாளர்கள் விவசாயிகள் சமூக நல பாதுகாப்பு திட்டம்
கலைக்கப்பட்டது.மீண்டும் அனைத்து விவசாய உறுப்பினர்கள் பலன்பெறும் வகையில்
உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேசிய பிரத்யோக அடையாள எண் வழங்க உள்ளதால் தனி அடையாள அட்டை கொடுத்து மற்ற
திட்டங்களிலும் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் விவசாய
தொழிலாளர்கள், விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு அமோக
வரவேற்பளித்துள்ளனர்.