/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்காசி மதுரா ஆஸ்பத்திரியில்இதயநோய்க்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சை
/
தென்காசி மதுரா ஆஸ்பத்திரியில்இதயநோய்க்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சை
தென்காசி மதுரா ஆஸ்பத்திரியில்இதயநோய்க்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சை
தென்காசி மதுரா ஆஸ்பத்திரியில்இதயநோய்க்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சை
ADDED : ஆக 22, 2011 02:23 AM
தென்காசி:தென்காசி மதுரா ஆஸ்பத்திரியில் இதயநோய் சிகிச்சையில் நவீன
தொழில்நுட்ப சிகிச்சை முறைகள் நேற்று துவங்கியது.தென்காசியில் தபால்
நிலையம் கீழ்புறம் மதுரா ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு செயல்பட்டு வரும்
இதயநோய் சிகிச்சை மையத்தில் எக்கோ, கலர் டாப்லெஸ்கேன், ட்ரெட்மில் டெஸ்ட்,
பேஸ்மேக்கர், கார்டியாக் மானிட்டர், தீவிர இதய சிகிச்சை பிரிவு, செயற்கை
சுவாசம், நெஞ்சுவலி, மாரடைப்பு, மூச்சிரைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்
மற்றும் சர்க்கரை நோய், இதய வால்வு, பேஸ்மேக்கர் பிரச்னைகள், உடல் பருமன்
உட்பட பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கூடுதலாக
மருத்துவமனையின் டாக்டர் செல்வம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி
ஆகிய நவீன தொழில்நுட்பத்தினை பயின்று நேற்று முதல் சிகிச்சை பணிகளை
துவங்கினார். இதற்கான வரவேற்பு விழா ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ
சங்க செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் செங்கோட்டை ஏ.எம்.மெடிக்கல் அஷ்ரப்,
லியாகத்அலி, சுரண்டை ஆசிரியர் சண்முகையாபாண்டியன், ராஜேந்திரன் ஆகியோர்
முன்னிலையில் நடந்தது.மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு டாக்டர் உமாசெல்வம்
வரவேற்றார். டாக்டர் செல்வத்திற்கு குத்துக்கல்வலசை ஆவுடையப்பன்,
வெய்க்கால்பட்டி அதிமுக கிளை செயலாளர்கள் நாராயணன், டேவிட்ராஜ், ஆசிரியர்
குமரன், அகரக்கட்டு பிரின்ஸ், ஆசிரியை ராணி, தென்காசி ஆர்.கே.ஸ்டுடியோ
கருப்பசாமி, அரியப்பபுரம் எம்.ஆர்.மெடிக்கல் ராமகிருஷ்ணன், சுரண்டை கணபதி
முருகா கேப்ஸ் கண்ணன் முருகன், பாவூர்சத்திரம் டாக்டர் அருணாசலம்,
மகாலெட்சுமி, சாமுவேல், ஆசிரியை எஸ்தர்லீமா, கோயிலாண்டனூர் ஆரோக்கியராஜ்,
ஆசிரியை குளோரி, புதுபட்டி ஆசிரியர்கள் ஜெயக்கொடி, ராயப்பராஜ்,
வெய்க்கால்பட்டி வின்சென்ட், வள்ளல் ரியல் எஸ்டேட் சேவியர் துரை, சுரண்டை
சன் ஸ்நாக்ஸ் சன் சுகுமார் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
வரவேற்பு விழா ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆர்.எல்.குமரன்,
மதுரா ஆஸ்பத்திரி மேனேஜர் குமரேசன், பணியாளர்கள் அமுதா, சுப்பு, இந்திரா,
சாலினி, வைத்தீஸ்வரி, காளியம்மாள், கோமதி, முத்துக்கனி, வேல்முருகன்
செய்திருந்தனர். முன்னதாக அமுதா நன்றி கூறினார்.இதய நோய் சிகிச்சை மையம் 24
மணிநேரமும் செயல்படும் என மதுரா ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
டாக்டர்கள் செல்வம், உமாசெல்வம் நன்றி தெரிவித்தனர்.