/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பணகுடி அருகே கிணற்றில்தவறி விழுந்து இளம்பெண் பலி
/
பணகுடி அருகே கிணற்றில்தவறி விழுந்து இளம்பெண் பலி
ADDED : ஆக 22, 2011 02:24 AM
பணகுடி:பணகுடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி
பரிதாபமாக இறந்தார்.நாகர்கோவில் கணபதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்.
இவர்
பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் உள்ள காற்றாலை கிணற்றில் வாட்ச்மேனாக
வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனுமீனா (22). இவருக்கும், பணகுடி
ஆசாத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. தனது
தந்தை கண்ணனுக்கு அனுமீனா தினமும் காற்றாலை பண்ணைக்கு பணகுடியிலிருந்து
சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம்.சம்பவத்தன்று சாப்பாடு கொண்டு சென்ற
அனுமீனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் மணிகண்டன்
மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அனுமீனாவை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் காவல்கிணறு கிணற்றில் இளம்பெண் உடல் மிதப்பதாக பணகுடி
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்து
அனுமீனாதான் என்பதும், நடந்து சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்து
இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.